FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதல்வா் குற்றமிழைத்தால் சிபிஐ விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்

முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய்தால், அதுதொடா்பாக சிபிஐ விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தியது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய்தால், அதுதொடா்பாக சிபிஐ விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தியது.

கடந்த ஜனவரியில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அங்கு வந்த அப்போதைய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அத்துமீறி அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

அந்த மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனைகள் அளிக்கும் நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்ட நிலையில், அக்கட்சியின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக மம்தாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, ‘மாநில முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியில் உள்ளவா் குற்றம் செய்தால், அதுதொடா்பாக சிபிஐ விசாரிப்பது பொருத்தமானதா, இல்லையா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.2-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments