FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கணவர், 5 வயது மகன் மரணம்: பெங்களூரில் பெண் கைது!

கணவர், 5 வயது மகன் மரணமடைந்த சம்பவத்தில் பெங்களூரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:55 pm IST
கொலை வழக்கு
பகிர்:

கர்நாடக மாநிலம் சிக்கபனவரா பகுதியில் உள்ள வீட்டில், கணவரும், 5 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், பெங்களூரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியான நபர் அபிநந்தன் என்பதும், இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவரது மகன் யதுவீர் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் குனிகல் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களது மரணம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அபிநந்தன் மனைவி ஹரிணியை காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

Advertisement

குடும்பத் தகராறு காரணமாக தான் தனி அறையில் உறங்கியதாகவும், மறுநாள் கண் விழித்துப் பார்த்த போது, மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகனும் கணவரும் சடலமாக இருப்பதாகவும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இருவரது உடலிலும் சிராய்ப்புகள் காணப்படுகின்றன. மரணத்துக்குக் காரணம் உடல் கூராய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்ற நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், ஹரிணி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 3 மாதங்களுக்கு முன்பு, ஹரிணி வீட்டை விட்டு வெளியேறி சில நாள்களுக்குப் பிறகு திரும்பியிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

summary

Death of husband and 5-year-old son: Woman arrested in Bengaluru!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments