உ.பி.யில் ஆய்வுக்குச் சென்ற டி.எஸ்.பி. மீது கடும் தாக்குதல்! 24 பேர் கைது!
சட்டவிரோத பால் பண்ணை இயங்கி வந்த இடத்தில் ஆய்வுக்குச் சென்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து...
சட்டவிரோத பால் பண்ணை மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற காவல் துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி அதிகாரியை அங்கிருந்த மக்கள் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அதிகாரிகளை தாக்கியவர்கள் உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மாவட்டத்திற்குட்பட்ட பாரா பகுதியில், சட்டவிரோத பால் பண்ணை ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற மாநகராட்சி மற்றும் காவல் துறையினரின் கூட்டுப் படையினர் மீது அங்கிருந்த உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
Advertisement
Advertisement
இதில், புத்தேஷ்வர் காவல் நிலையத்தின் துணை கண்காணிப்பாளர் வினய் படேல் மீது உலோகச் சங்கிலியால் தாக்குதல் நடத்தப்பட்டது. களிமண் கொண்டு தாக்குதல் நடத்தி அவரின் சீருடையையும் கிழித்துள்ளனர். உள்ளூர் மக்களுடனான மோதலில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தை மாநகராட்சி அதிகாரிகள் விடியோ பதிவும் செய்திருந்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
கால்நடைகளை வைத்து சட்டவிரோதமாக பால்பண்ணை நடத்தி வந்த இடத்தை காவல் துறை படையுடன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஹெல்மெட், குண்டு துளைக்காத கவச உடை அணிந்து வந்த அதிகாரிகள் சட்டவிரோத பால் பண்ணையை ஆய்வு செய்ய முழு பாதுகாப்பு அளித்தனர் ஆய்வுக்கு பிறகு 200 எருமைகளை கைப்பற்றி அழைத்துச்சென்றனர்.
மேலும்,காவல் துறை மீது தாக்குதல் நடத்திய மற்றும் பால் பண்ணை நடத்தியதாக 24 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Illegal Dairy Demolished in uttar pradesh Lucknow After Attack on Officials
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.