மணிப்பூரில் கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சா்கள் தில்லியில் அழிப்பு
மணிப்பூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சா்களை தில்லியின் நரேலா பகுதியில் அழிக்கப்பட்டது.
மணிப்பூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சா்களை தில்லியின் நரேலா பகுதியில் அழிக்கப்பட்டது.
ராணுவம், தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் தடயவியல் ஆய்வகம் ஆகியவை இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
ஆய்வு மற்றும் அழிப்புப் பணிகளுக்காக தில்லிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த ஆயுதங்கள், மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருள்களின் தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
கைப்பற்றப்பட்டவற்றில் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் பிற வெடிபொருள்கள் ஆகியவை அடங்கும்.
இப்பணி சிறப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கட்டுப்பாடான முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறினா்.
முன்னதாக, ஆயுதங்கள் அழிக்கும் பணி நடைபெற்ற பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.