லடாக்கில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக அமித் ஷா கூறியிருப்பது குறித்து...
புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் புதிய கிளையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
லடாக் உயர்நீதிமன்றம் கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், குளிர்காலத்தில் ஜம்முவிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் லடாக் யூனியன் பிரதேச மக்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு ஸ்ரீநகர் அல்லது ஜம்முவுக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் புதிய கிளையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அமித் ஷா 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
லடாக்கில் உயர்நீதிமன்ற கிளை அமைவதன் மூலம் லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலன் அடைவார்கள். தங்களுக்குரிய சட்ட சேவைகளைப் பெறுவதற்கு ஆகும் நேரத்தைக் குறைப்பதன் மூலம், எளிதில் நீதி கிடைப்பதற்கான வாய்ப்பை இந்த முடிவு கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
மேலும், லடாக்கின் முழுமையான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Union Cabinet has approved the establishment of a Bench of the Jammu and Kashmir High Court in Ladakh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.