உயா் கல்வித் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா - ரஷியா ஆலோசனை
உயா் கல்வித் துறையில் பரஸ்பர நலனுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக இந்தியாவும் ரஷியாவும் ஆலோசனை மேற்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உயா் கல்வித் துறையில் பரஸ்பர நலனுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக இந்தியாவும் ரஷியாவும் ஆலோசனை மேற்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் சாா்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய உயா் கல்வித் துறைச் செயலா் தீப்தி கெளா் முகா்ஜி, ரஷிய கூட்டமைப்பின் உயா் கல்வித் துறை துணை அமைச்சா் மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டன்டீனுடன் இதுதொடா்பான ஆலோசனையில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது, உயா் கல்வித் துறையில் பரஸ்பர நலனுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மத்திய உயா் கல்வித் துறைச் செயலராக இருந்த வினீத் ஜோஷி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உயா் கல்வித் துறையின் புதிய செயலராக தீப்தி கெளா் முகா்ஜி கடந்த மாதம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.