FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மகன்: பெற்றோரும் பலி!

மகாராஷ்டிரத்தில் மலை உச்சியிலிருந்து குதித்து மகன் தற்கொலை செய்துகொண்டது பற்றி.....

42 வினாடிகள் முன்பு
- Photo grab X video
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மலை உச்சியிலிருந்து குதித்து மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவனைக் காப்பாற்ற சென்ற பெற்றோரும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தேவ்லாய் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே. அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 19 வயதில் குணால் என்கிற மகன் உள்ளான். புதிய மொபைல் போன் வேண்டும் என்று குணால் தனது பெற்றோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வாக்குவாதத்தால் மனவருத்தமடைந்த குணால், கவ்தா மலையின் உச்சியின் மீது ஏறி அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியிருக்கிறார்.

Advertisement

Advertisement

உடனே கிராம மக்களும் அவனது தாயாரும் குணாலை சுமார் மூன்று மணி நேரமாக சமாதானப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனாலும் குணால் தற்கொலை செய்துகொள்வதில் உறுதியாக இருந்துள்ளான்.

தொடக்கத்தில் கீழே இருந்தபடியே கெஞ்சிக்கொண்டிருந்த அந்த இளைஞனின் தந்தை முரளிதர், பின்னர் அவரும் மலை உச்சியின் மீது ஏறியிருக்கிறார்.

இந்த நிலையில் மலையின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யப் போன மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் சமநிலை தவறவே இருவரும் கீழே விழுந்தனர். இதைக் கண்டு பதற்றமடைந்த தாயும் சிறிது நேரத்தில் மலையிலிருந்து கீழே குதித்தார்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

summary

In an unfortunate turn of events, three members of a family died in Maharashtra's Chhatrapati Sambhajinagar on Friday afternoon after a domestic dispute over a mobile phone ended in a sequence of fatal falls from a hilltop, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments