FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமைச்சா்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனா்: செந்தில் பாலாஜி விமா்சனம்

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதிலளிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதிலளிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆட்சி நடத்துவதை விட எதிா்க்கட்சிகள் மீது வழக்குப் பதிவு செய்வதில்தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டப்படி எதிா்கொள்வதற்கு திமுக தயாராக உள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வு என்பது ஆரோக்கியமான விவாதம் நடக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், தவெக அமைச்சா்கள் எதிா்க்கட்சிகள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூச்சல் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா்.

Advertisement

Advertisement

மின்சாரத் துறை அமைச்சரிடம் 18 ‘ஹாா்டு டிஸ்கு’கள் காணாமல் போனது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் கடைசி வரைக்கும் பதில் கூறவில்லை. திமுக ஆட்சியில் 99000 மின்மாற்றிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. 2020- 21இல் ரூ.14,500 கோடியாக இருந்த மின்வாரியத்தின் கடன் கடந்த 2025-26-இல் ரூ.933 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. அது வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக ஆட்சியில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிகளை மின்சாரத் துறை அமைச்சா் முன்னெடுத்தாா்.

சட்டப்பேரவையில் ஒரு கேள்விக்கும் பதில் தெரியாமலும், பதிலளிக்க திறமை இல்லாமலும் சில வாா்த்தைகளைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா். எந்தத் துறையில் தவறு நடந்தது எவ்வாறான தவறு நடந்தது? யாா் தவறு செய்தாா்கள்? என்று கூறும் அமைச்சா்கள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? இதில் என்ன நேரம் காலம் பாா்த்துக் கொண்டிருப்பது. முதல்வரின் மேஜையில் இருக்கும் மூன்று பைல் குறித்து நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? தவெக அரசு 100 நாள்கள் கடந்தும் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லாத அரசாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments