FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே - IANS
பகிர்:

இட ஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் சிவில் நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட 8.2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையான இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவர பின்வாசல் வழியாக மோடி அரசு திட்டமிடுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கார்கே, அதுதொடர்பான ஊடகச் செய்தி ஒன்றின் அடிப்படையில் அமைச்சக வாரியான காலிப் பணியிடங்களின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து விமர்சித்திருந்தார்.

அந்தப் பதிவில், “ரயில்வேயில் 2.40 லட்சம் காலிப் பணியிடங்களும், பாதுகாப்புத் துறையில் 2.41 லட்சம் காலிப் பணியிடங்களும் உள்ளன. உள்துறை அமைச்சகத்தில் 1.10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் 5.1 லட்சம் நிரந்தர வேலைகள் நீக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 19%-லிருந்து 49%-ஆக அதிகரித்துள்ளது. இது வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல. சமூகநீதி தொடர்பானது. அரசுப் பணியிடங்களில் காலிப் பணியிடங்களை வைத்திருப்பதால் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பு இருக்காது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றால், இட ஒதுக்கீடு சார்ந்த வேலைகள் முடிவுக்கு வரும். நிரந்தர வேலைகளை ஒப்பந்த முறையில் மாற்றினால், இடஒதுக்கீடு முடிவுக்கு வரும். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர அரசியலமைப்புத் திருத்தம் தேவையில்லை. இடஒதுக்கீடு உள்ள வேலைகளை நீக்கினாலே போதும். இது சமூக நீதிக்கு எதிரான பாஜகவின் செயல்திட்டம்.

பதவிகளை காலியாக வைத்திருங்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிடுங்கள். ஒப்பந்தப் பணியாளார்கள் சார்ந்த வேலைகளை அதிகரியுங்கள். பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உள்பட அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளையும் பறித்துவிடுங்கள். அம்பேத்கர் வழங்கிய உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவர சதி செய்யும் பாஜகவின் திட்டம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என குற்றம் சாட்டியிருந்தார்.

summary

Modi government planning to abolish reservation through the back door: Kharge alleges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments