FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாங்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்! விலை மேலும் அதிகரிக்குமா?

வாங்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்குமா என்பது பற்றி..

வெங்காயம் விலை - Center-Center-Chennai
பகிர்:

காரீப் பருவக் காலத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததன் காரணமாக, நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயம் விலை 32 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வெங்காயம் நறுக்கும்போது மட்டும் கண்ணீர் வரவழைத்த காலம் மாறி, அவ்வப்போது வாங்கும்போதே விலையைக் கேட்டு கண்ணீர் வடிக்கும் காலம் இப்போது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்து பல்வேறு காய்கறி சந்தைகளில் வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த வார தொடக்கத்தில் ரூ.50ஐத் தொட்ட வெங்காயம் விலை இறுதியில் தில்லி, சென்னை என பரவலாக ஒரு கிலோ ரூ.65ஐ எட்டியிருக்கிறது. அதாவது, மார்ச் - ஏப்ரல் மாதத்தில் ராபி பருவ சாகுபடி பாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியே, இன்று வெங்காய விலை உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட அக்டோபர் வரை நீடிக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஒரு பக்கம் அரிசி, சர்க்கரை விலைகள் உயர்ந்து மக்களை துயரத்தில் ஆழ்த்திவரும் நிலையில், வெங்காயம் விலையோ நாள்தோறும் உயர்ந்து கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், ஆகஸ்ட் மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்திருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பருவ சாகுபடி முடிந்து வெங்காயம் வரத்தொடங்கினால்தான் நிலைமை சீரடையும். அதற்குள், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர மாநலி சிறு, குறு விவசாயிகளின் வெங்காயம் வந்தால், ஓரளவுக்கு நிலைமை சீரடையலாம். இதனால், அக்டோபர் மாதத்துக்குள் வெங்காயம் விலை சதமடிப்பது தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் நிலைமை இன்னும் மோசம்தான்.

அதுபோல, விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏழு முறை, குறைந்தபட்ச உறுதிசெய்யப்பட்ட கொள்முதல் விலையை மாற்றியமைத்திருக்கிறது.

கன்டா விரைவு ரயில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் அதிகம் தேவைப்படும் மாநிலங்களுக்கு வெங்காயத்தை விநியோகம் செய்யும் வகையில் கன்டா விரைவு ரயிலை இயக்குகிறது. நாசிக்கிலிருந்து வெங்காயத்தை எடுத்துக் கொண்டு தில்லி, சென்னை, கொச்சி, குவகாத்தி நகரங்களில் வெங்காயம் விநியோகம் நடைபெறும் வகையில் இந்த ரயில் இயக்கப்படும்.

வெங்காயம் விலையேறினால்...

தென்னிந்திய மாநிலங்களில் அனைத்து உணவுகளிலும் வெங்காயம் இடம்பெறும். வெங்காயம் விலை ஏறும்போது, ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.

ஒருபக்கம் வெங்காயம் விலை உயர்ந்தாலும் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் குறைந்துள்ளன. அதாவது ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக விலையேற்றம் என்பது வெங்காயத்தின் மீது ஆண்டுதோறும் காணப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக ஒரு கிலே வெங்காயம் விலை ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது என்பதே கள நிலவரம்.

உண்மையில், வெங்காய விலை ஏற்றம் என்பது வரும் செப்டம்பர் - அக்டோபர் வரை நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

summary

Onion prices rise What is the reason?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments