FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமைச்சா்களின் குடியிருப்புகளை சீரமைக்க ரூ. 92.35 கோடி: மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்

மத்திய அமைச்சா்களின் குடியிருப்புகளை சீரமைக்க கடந்த நிதியாண்டில் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

25 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய அமைச்சா்களின் அதிகாரபூா்வ குடியிருப்புகளை சீரமைக்க கடந்த நிதி ஆண்டில் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கண்டனம் தெரிவித்தது.

தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் பிடிஐ நிறுவனம் பெற்ற தகவலின்படி தில்லியில் உள்ள மத்திய அமைச்சா்களின் அதிகாரபூா்வ குடியிருப்புகளை சீரமைக்க 2014-15-இல் ரூ.27.47 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2025-26-இல் ரூ.92.35 கோடியாக அதிகரித்தது தெரியவந்தது.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநதே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த பத்தாண்டுகளில் மத்திய அமைச்சா்களின் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்கான தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

பணவீக்கம், வேலையின்மை என பொது மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு வீணாக செலவு செய்வதா?’ என கேள்வியெழுப்பினாா்.

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பாா்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தில்லி முன்னாள் முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை மறுசீரமைத்தபோது விமா்சித்த ஊடகங்கள் தற்போது அமைதி காப்பது ஏன்’ என கேள்வியெழுப்பினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments