FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடு உணவு தானிய இறக்குமதியைச் சார்ந்திருக்க முடியாது: சி.பி. ராதாகிருஷ்ணன்

மொத்தம் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

30 வினாடிகள் முன்பு
முகனூருவில் பாப்கார்ன் ஆலையில் பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - X | CP Radhakrishnan
பகிர்:

மொத்தம் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆந்திர மாநிலம் முசுனூரு கிராமத்தில் நடைபெற்ற சோளப் பயிர் விதை ரகங்கள் அறிமுக விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: நம் நாட்டில் 140 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே நாம் உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க முடியாது. வேளாண் துறையின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அத்துறைக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும்.

வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் புதுமை படைத்தலும் நவீன தொழில்நுட்பங்களும் நாட்டில் இத்துறையைச் செழிப்பானதாக மாற்றும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படும். நாடு தன்னிறைவு பெற வேளாண் துறை தொடர்ந்து பங்களிக்கும் என்றார் அவர். இந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்தியிலும் ஆந்திரத்திலும் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் வேளாண்மையை ஒரு பொருளாதார சக்தியாகவும், விவசாயிகளை தொழில்முனைவோராகவும் கருதுகின்றன.

Advertisement

Advertisement

விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களை மதிப்பு கூட்டி அவற்றை ஏற்றுமதி செய்வதே நமது நோக்கம். நம் நாட்டில் உற்பத்தியாகும் மஞ்சள், சோளம், மிளகாய் ரகங்கள், மீன்கள் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் விளையும் வேளாண் பொருள்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. வேளாண் விளைபொருள்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பதப்படுத்துகிறோமா அந்த அளவுக்கு வருவாய் அதிகரிக்கும்.

மாநிலத்தின் நுசிவீடு உள்ளிட்ட பகுதிகளில் பனை எண்ணெய், கோக்கோ போன்ற வணிகப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு நீண்டகால பயிர் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. எல்-நினோ விளைவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கோதாவரி நதிநீர் கிருஷ்ணா நதி டெல்டா பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது.

எல்}நினோ விளைவைக் கருத்தில் கொண்டு மாற்றுப் பயிர்களை விளைவிப்பதற்கான முன்முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீர்வளத்தை நன்கு பயன்படுத்தும் நோக்கில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு, காவிரி ஆகிய முக்கிய தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு ஆந்திர அரசு உறுதிபூண்டுள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

முன்னதாக, ஏலூரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு சோளப் பயிர் விதை ரகங்களை சி.பி.ராதாகிருஷ்ணனும், சந்திரபாபு நாயுடுவும் அறிமுகம் செய்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments