நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க கார்கே வலியுறுத்தல்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு கார்கே கோரிக்கை விடுத்தது குறித்து...
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கலபுரகியில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது, "கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகள், நேபாள நாட்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.
Advertisement
Advertisement
நேபாளத்தில் துரதிருஷ்டவசமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. இயற்கைக்கு எதிராக யாராலும் நிற்க முடியாது" என்று தெரிவித்தார்.
திபெத்தில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், புதன்கிழமை (ஆக. 26) திடீரென வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அங்குள்ள பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் மேலும் 132 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், இந்தப் பேரிடரில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாகவும், நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.
Congress Chief Kharge urges the Prime Minister to provide special relief to the families of Indians stranded in the Nepal floods
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.