FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளம்: கர்நாடக பயணிகள் குறித்து தகவல் கோரும் அரசு!

காணாமல் போன கர்நாடக சுற்றுலாப் பயணிகள் விவரங்களை சேகரிக்க கூகுள் படிவம் வழியாக தகவல் அளிக்குமாறு அரசு வேண்டுகோள்...

நேபாள வெள்ளம்.
பகிர்:

திபெத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே நேபாளத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் தகவல்களை அம்மாநில அரசு கோரியுள்ளது.

நேபாள ஆற்றில் ஆக. 26-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவர்களில் 291 பேர் வெளிநாட்டவர். 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கர்நாடக வருவாய்த் துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

Advertisement

Advertisement

நேபாளம் மற்றும் திபெத்தில் மீட்புப் பணிகள், வெளியேற்றும் நடவடிக்கைகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அங்குச் சிக்கியுள்ளவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் பற்றி விவரங்கள் கூகுள் படிவம் (Google Form) மூலம் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தகவல்கள், மத்திய வெளியுறவு அமைச்சகம், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுபவர்கள் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தை (SEOC) 1070 அல்லது 080-22253707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூகுள் படிவம், கர்நாடக அரசின் வருவாய்த் துறை (பேரிடர் மேலாண்மை) செயலாளர் மற்றும் நிவாரண ஆணையரான மனோஜ் குமார் மீனா அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளோ, குடிமக்களோ யாரேனும் காணாமல் போயிருந்தாலோ அல்லது அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தாலோ, அவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மாநில அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று கருதினால், காணாமல் போனவரின் முழுப் பெயர், தொலைபேசி எண், கடைசியாகத் தொடர்பு கொண்ட இடம் மற்றும் நேரம், நிரந்தர முகவரி ஆகிய விவரங்களைக் கூகுள் படிவம் ([docs.google.com/forms]) மூலம் உடனடியாக அரசுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. seockarnataka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவ, அங்குள்ள இந்தியத் தூதரகம் அவசரக்கால வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. தகவல் மற்றும் உதவிக்கு பொதுமக்கள் +977 9851316807, +977 9709107500 அல்லது +977 9810326117 ஆகிய எண்களில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments