FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்தில் அடுத்த பேரிடருக்கு நாள் குறித்த புதிய ஏரி! எப்படி உருவானது?

பெரு வெள்ளத்தின்போது உருவான புதிய ஏரிகள், நேபாளத்தில் அடுத்த பேரிடருக்கான அச்சுறுத்தலாக மாறியிருப்பது பற்றி..

45 வினாடிகள் முன்பு
நேபாளம் - PTI
பகிர்:

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்து போடே கோஷி ஆற்றில் பாய்ந்தோடி வந்து நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு நேரிட்டு இரண்டு நாள்களுக்குள் புதிதாக உருவான ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை வெளியாகி வருகிறது.

பனிப்பாறைகள் உடைந்து உருவான பெருவெள்ளத்தின்போது, தண்ணீரின் வேகத்தால் உருவான மிகப்பெரிய பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இரண்டு ஏரிகள் உருவாகியிருக்கின்றன. இவைதான் தற்போது நேபாளத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கலக்கும்முன்பு, ஆற்றின் வேகத்தால் உண்டான ஒரு பெரிய ஏரி போன்ற அமைப்பில் தற்போது தண்ணீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும், ஏரியின் கரைகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அதிலிருந்து மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து போடே கோஷியில் பாயலாம் எனவும் அச்சுறுத்தும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

இதனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஆற்றங்கரையோரங்களில் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த ஏரியின் ஆழமோ, அதிலிருக்கும் தண்ணீரின் அளவோ இதுவரை கணிக்கப்படவில்லை என்பதால் அது ஒருவேளை உடைந்தால் எந்த விதமான பிரச்னை ஏற்படும் என்பதை கணிக்க முடியாத நிலையில் நேபாள அதிகாரிகள் உள்ளனர்.

அதாவது, நேபாள வெள்ளத்தின்போது இரண்டு பெரிய ஏரிகள் உருவாகியிருக்கின்றன. ஒன்று, பனிப்பாறைகளுக்கு அருகே உருவாகியிருக்கிறது. அங்கு பனிப்பாறைகளிலிருந்து வரும் தண்ணீர் விழுகிறது.

மற்றொன்று மிகப் பெரியது, அது நேபாளத்துக்குள் பாயும் ஆற்றுக்கு அருகே உருவாகியுள்ளது. அங்கு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் நின்று ஒரு ஏரி போன்ற அமைப்பு உருவாகியிருக்கிறது.

சேறும், சகதியும் இணைந்து உருவான கரைகள் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் இருப்பதால் நேபாளத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments