FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமாயின், பதவியை ராஜிநாமா செய்யவும் தயார் என என். ரங்கசாமி கூறியது குறித்து...

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமாயின், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யவும் தயார் என என். ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பேசியதாவது, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளோம்.

Advertisement

Advertisement

மாநில அந்தஸ்து பெறுவதில், கடந்த காலத்தில் மாற்றுக் கருத்துகள் இருந்தபோதிலும் தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும் மக்களும் அறிவர். ஆகையால், மாநில அந்தஸ்து பெறுவதற்கான சரியான தருணம் இதுவே. இது தொடர்பாக பல பிரதமர்களை சந்தித்துள்ளோம். பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்தபோதும்கூட, மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தினேன்.

மாநில அந்தஸ்து வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவேன். இதற்காக மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்றம் வரையில் சென்று உறுதிப்படுத்தி விட்டனர். ஆளுநரின் அதிகாரத்தால், நிர்வாக ரீதியாக பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இதற்கு மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமாயின், என்னுடைய பதவியை ராஜிநாமா செய்யவும் தயார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். அதற்காக எதையும் இழக்கத் தயார்" என்று தெரிவித்தார்.

summary

Puducherry CM N. Rangaswamy has stated that he is ready to resign from his post if Puducherry is granted statehood

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments