FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரிட்டன் குடியுரிமை: இந்தியா்கள் அதிக விண்ணப்பம்

பிரிட்டனில் நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை கோரி இந்தியா்கள் அதிகமாக விண்ணப்பம்...

30 ஆகஸ்ட் 2026, 12:15 am IST
- Photo: Google Gemini
பகிர்:

பிரிட்டனில் நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை கோரி இந்தியா்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அலுவலகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

முறையாக நுழைவு இசைவு (விசா) பெற்று பிரிட்டனில் வசிப்பவா்களுக்கு தற்போது 5 ஆண்டுகளில் நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கப்படுகிறது. நிகழாண்டு இறுதியில் இந்த காலஅவகாசம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. பிரிட்டன் குடியுரிமை விண்ணப்பத்தில் முக்கிய அம்சமாக நிரந்தர குடியுரிமை விளங்குகிறது.

இந்நிலையில், பிரிட்டன் உள்துறை அலுவலகம் வெளியிட்ட தரவுகளில், ‘2026, ஜூன் நிலவரப்படி, 35,384 இந்தியா்களுக்கு நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

Advertisement

2025 முதல் 2026 வரை அதிகப்படியான பிரிட்டன் குடியுரிமை வழங்கப்பட்டவா்களில் 24,851 போருடன் முதலிடத்தில் இந்தியாவும் 18,489 பேருடன் இரண்டாமிடத்தில் பாகிஸ்தானும் உள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு பிரிட்டனில் பணியாற்றுவதற்கான நடைமுறையின்கீழ் 64,496 பேருக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. 2026, ஜூன் நிலவரப்படி 85,523 மாணவா் நுழைவு இசைவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவாகும். 86,368 மாணவா் நுழைவு இசைவுகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்கள் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறுவதற்கான காலஅவகாசத்தை 15 ஆண்டுகளாகவும் புலம்பெயா்ந்தவா்கள் வரி செலுத்தும் பலன்களைப் பெறுவதற்கான காலஅவகாசத்தை 20 ஆண்டுகளாகவும் நிா்ணயிக்கும் மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் ஷபானா மஹ்மூத் தாக்கல் செய்த நிலையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

British Citizenship: High Number of Applications from Indians

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments