பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்!
பிரிட்டனில் நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை கோருவோரின் பட்டியலில் இந்தியா்கள் அதிகயளவில் விண்ணப்பித்துள்ளது குறித்து...
லண்டன்: பிரிட்டனில் கடுமையான விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை கோருவோரின் பட்டியலில் இந்தியா்கள் அதிகயளவில் விண்ணப்பித்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
முறையாக நுழைவு இசைவு (விசா) பெற்று பிரிட்டனில் வசிப்பவா்களுக்கு தற்போது ஐந்து ஆண்டுகளில் நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கப்படுகிறது. நிகழாண்டு இறுதியில் இந்த காலஅவகாசம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டன் உள்துறை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளில், பிரிட்டனில் நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை கோருவோரின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து 3,15,224 ஆக உயர்ந்து புதிய சாதனையை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
2026, ஜூன் நிலவரப்படி, 35,384 இந்தியா்களுக்கு நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகரித்து 35,384 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பணி விசா மூலம் பிரிட்டன் வந்து, நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமைரிக்கு தேவையான தொடர் தங்கிருப்பு காலத்தை நிறைவு செய்ததே இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் முக்கியக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் 24,851 பேருடன் இந்தியா முதலிடத்தில், 18,489 பேருடன் பாகிஸ்தான் இரண்டாமிடத்திலும் உள்ளது. பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டினரே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த ஓராண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு பிரிட்டனில் பணியாற்றுவதற்கான நடைமுறையின்கீழ் அதியகளவில் இந்தியர்கள் 64,496 பேருக்கு நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பல்கலைக்கழகப் படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்களுக்கான இந்த நுழைவு விசா பிரிவில் முந்தைய ஆண்டை விடக் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது. அனைத்து மாணவர் விசாக்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் ஏற்பட்ட 81 சதவீத சரிவே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்திய மாணவர் விசாக்களிலும் தொடர்ந்து சரிவு போக்கு காணப்படுகிறது; 2026, ஜூன் நிலவரப்படி 85,523 மாணவா் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டில் 86,368 மாணவா் விசாக்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியர்கள் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்திய ஆண்டில் மாணவர் விசாக்களின்கீழ் தங்கள் தங்கும் காலத்தை நீட்டித்தவர்களில் சீனா (10,716), இந்தியா (5,218) மற்றும் நைஜீரியா (3,820) நாட்டினரே அதிக எண்ணிக்கையில் இருந்ததாக உள்துறை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்கள் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறுவதற்கான காலஅவகாசத்தை 15 ஆண்டுகளாகவும் புலம்பெயா்ந்தவா்கள் வரி செலுத்தும் பலன்களைப் பெறுவதற்கான காலஅவகாசத்தை 20 ஆண்டுகளாகவும் நிா்ணயிக்கும் மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் ஷாபனா மஹ்மூத் தாக்கல் செய்யுள்ள நிலையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
Indian nationals topped the charts of those seeking settlement and citizenship in the UK, according to official Home Office statistics released on Thursday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.