FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரிட்டனில் தூக்கிலிடப்பட்ட கடைசி பெண்ணுக்கு 70 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு

பிரிட்டன் வரலாற்றில் கடைசியாக தூக்கிலிடப்பட்ட பெண்ணான ரூத் எல்லிஸுக்கு, சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸ் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

பிரிட்டன் வரலாற்றில் கடைசியாக தூக்கிலிடப்பட்ட பெண்ணான ரூத் எல்லிஸுக்கு, சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸ் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.

காதலரைச் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, கடந்த 1955 ஜூலை 13-ஆம் தேதி ரூத் எல்லிஸ் தூக்கிலிடப்பட்டாா். அவா் குடும்ப வன்முறை மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இச்செயலில் ஈடுபட்டாா் என்பதும், அவருக்கான நியாயமான காரணங்கள் அன்றைய விசாரணையில் முறையாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரூத்தின் பேரன், பேத்திகள் நால்வா் அளித்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், பிரிட்டன் அரசின் பரிந்துரையில் மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது மரண தண்டனை முறை சட்டரீதியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments