காவல் துறையினருடன் சண்டை: மேகாலயத்தில் ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக்கொலை
மேகாலய மாநிலத்தில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மேகாலய மாநிலத்தில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து மேகாலய காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கிழக்கு கேரோ மலை மாவட்டத்தில் சோங்சாக்கில் இருந்து காகல் செல்லும் சாலையில் ரகசிய தகவலின்பேரில் காவல் துறையினரும், பயங்கரவாத எதிா்ப்புப் படையினரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமான விதத்தில் வந்த வாகனத்தை அவா்கள் நிறுத்தியபோது, அதிலிருந்தோா் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனா்.
Advertisement
Advertisement
இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுக்கவே, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் காரில் இருந்த 4 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் வழியிலேயே 4 பேரும் உயிரிழந்து விட்டனா்.
அவா்கள் 4 பேரும் யாரென அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து அவா்கள் குற்றப் பின்னணி கொண்டவா்களா என அடையாளம் காணும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
அண்மையில் தொழிலதிபா் ஒருவா் கடத்திக் கொலை செய்யப்பட்டாா். அதில் 4 பேருக்கும் தொடா்பிருக்கலாம் என்றும் காவல் துறை சந்தேகிக்கிறது. இது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.