FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது குறித்து...

நிவாரணப்பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம். - படம் - எக்ஸ்
பகிர்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இதுவரை, 68.5 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.

நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி 5 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துக்கு உதவுவதற்காக பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டின் பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்களை வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

அந்த வகையில், வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் இந்தியா இதுவரை 4 விமானங்களில் நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. 4 விமானங்களிலும் சேர்த்து 68.5 டன் நிவாரணப் பொருள்களும், மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதில், சுரங்கப்பாதை தொழில்நுட்பக் குழு, டிஎன்ஏ பகுப்பாய்விற்கான தடயவியல் நிபுணர்கள் குழு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள், போர்வைகள், தார்ப்பாய், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை, 3000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், 700-க்கும் மேற்பட்டோர் பலியானதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

India has so far sent 68.5 tonnes of relief materials to flood-hit Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments