FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீட் முதுநிலை தேர்வு: ஜெய்ப்பூரில் குளறுபடியால் மறுதேர்வு அறிவிப்பு

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நீட் முதுநிலை தேர்வில் குளறுபடி ஏற்பட்டது குறித்து...

நீட் தேர்வெழுதிய மாணவர்கள் - பிடிஐ
பகிர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வில் குளறுபடி காரணமாக இரு தேர்வு மையங்களுக்கு மட்டும் மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் முதுநிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று சிறப்பாக நடந்து முடிந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு, நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 339 நகரங்களில் உள்ள 1,111 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 2,73,096 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,65,980 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு தேர்வு மையங்களில் மட்டும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையால், மாணவர்கள் தேர்வெழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. இரு தேர்வு மையங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இவ்விரு மையங்களுக்கு மட்டும் வருகிற செப். 5-ல் மறுதேர்வு நடத்தப்படும். இதனால், 2,445 தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டியுள்ளது.

நீட் தேர்வெழுதிய மாணவர்கள் - பிடிஐ
summary

NEET-PG 2026 chaos in Jaipur leaves students furious

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments