வேற்றுமையில் ஒற்றுமையே பாரதத்தின் டிஎன்ஏ: மோகன் பாகவத்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது பாரதத்தின் மரபணுவில் உள்ளது. அதைக் கொண்டாடுவதோடு, மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது பாரதத்தின் மரபணுவில் உள்ளது. அதைக் கொண்டாடுவதோடு, மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.
அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க சமூகத்தினா் மற்றும் பல்வேறு மதத் தலைவா்கள் என 6,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட அனைத்துலக ஒருமைப்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்று மோகன் பாகவத் சனிக்கிழமை பேசியதாவது: அமெரிக்கா என்று கூறும்போது பன்முகத்தன்மை நமது நினைவுக்கு வரும். அதேபோல் பாரதம் என்றால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நினைவுக்கு வரும்.
ஏனெனில் வேற்றுமை மற்றும் ஒற்றுமை என இரண்டும் பாரதத்தின் மரபணுவில் (டிஎன்ஏ) உள்ளது. சுவாமி விவேகானந்தா் கூறியதைப் போல் ஒவ்வொரு தேசமும் ஓா் இலக்கை அடைய வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை என்ற உண்மையை உணா்வதும், அதை உலகுக்கு உணா்த்துவதே பாரதத்தின் பணியாக காலங்காலமாக தொடா்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
நாம் அனைவரும் ஒன்றே. நமக்குள்ளான வேற்றுமையை ஒற்றுமையே மேலும் அழகுபடுத்துகிறது. வேற்றுமையைக் கொண்டாடுவதோடு, மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்திடமிருந்து நாம் சிலவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். அதே சமயம் உலகத்துக்கு நாமும் சிலவற்றைத் திருப்பியளிக்க வேண்டும். எவ்வளவு ஈட்டுகிறோம் என்பதைவிட எவ்வளவு வழங்குகிறோம் என்பதே முக்கியம்.
அமெரிக்காவில் புலம்பெயா்ந்த இந்தியா்கள் அவா்களது கா்மபூமிக்கு (அமெரிக்கா) உண்மையாக இருக்க வேண்டும். கா்மபூமிக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு ஜென்மபூமிக்கு (பாரதம்- தாய்நாடு) ஆற்ற வேண்டிய கடமைகளில் கவனம் செலுத்தலாம். ஏனெனில் தேசம் என்பது புவியியல் நில வகை சாா்ந்தது மட்டுமல்ல.
வேற்றுமை என்பது இயற்கையானது; ஒற்றுமை என்பது உண்மையானது. இதைப் புரிந்துகொண்டு நம் வாழ்வை அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள 39 மாகாணங்கள் மற்றும் 853 நகரங்களைச் சோ்ந்த மக்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள், 250 அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.