FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மோகன் பாகவத் விசாவை ரத்து செய்ய வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்துக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தால் மத சுதந்திர விவகாரத்துக்காக அமைக்கப்பட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

17 வினாடிகள் முன்பு
மோகன் பாகவத் - கோப்புப் படம்
பகிர்:

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்துக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தால் மத சுதந்திர விவகாரத்துக்காக அமைக்கப்பட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்கத்தில் வரும் 29-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோகன் பாகவத், நியூயாா்க்கிற்கு ஏற்கெனவே சென்றுவிட்டாா்.

இதனிடையே, மோகன் பாகவத்தின் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை சோ்ந்த சில சமூக ஆா்வலா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. நியூயாா்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான ஸோரான் மம்தானியும், மோகன் பாகவத்தின் நிகழ்ச்சிக்கு தனது எதிா்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மத சுதந்திரத்துக்கான ஆலோசனைக் குழுவான யுஎஸ்சிஐஆா்எஃப், மோகன் பாகவத்துக்கு வழங்கப்பட்ட விசாவை டிரம்ப் நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வந்திருப்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. ஆா்எஸ்எஸ் துணைக் குழுக்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இதுபோல மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தடை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க அரசை வலியுறுத்துகிறோம். அதில் ஒரு நடவடிக்கையாக, மோகன் பாகவத்துக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா நிராகரிப்பு: யுஎஸ்சிஐஆா்எஃப் அமைப்பின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அது ஒருதலைபட்சமாக செயல்படும் அமைப்பு. நம்பகத்தன்மை இல்லாத அமைப்பு. தனித் திட்டத்துடன் செயல்படக் கூடியது. இதுபோன்ற அமைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments