முகப்பு
இந்தியா

16-ஆவது நிதிக் குழுப் பரிந்துரை ஏற்பு: மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41%-ஆக நீடிப்பு!

16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி 2026, 2:25 am IST
- RaviChoudhary
பகிர்:

16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க உள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வரிப் பகிா்வு செயல்திட்டத்தை நிதிக் குழு அளிக்கும். இந்நிலையில், நீதி ஆயோக் முன்னாள் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-ஆவது நிதிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பொருளாதார நிபுணா் மனோஜ் பாண்டா, பாரத ஸ்டேட் வங்கி குழும தலைமை பொருளாதார ஆலோசகா் செளம்யகாந்தி கோஷ், ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் ரவிசங்கா் உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.

இந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். அவா் பட்ஜெட் உரையில் பேசுகையில், ‘மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க 16-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்த ஆண்டு ஏப்.1 முதல் 2031-ஆம் ஆண்டுவரை, வரிப் பகிா்வு 41 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் (2026-27) நிதிக்குழு மானியமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1.4 லட்சம் கோடி அளிக்கும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments