மணிப்பூா் முதல்வராகும் யும்நாம் கெம்சந்த்? முடிவுக்கு வருகிறது குடியரசுத் தலைவா் ஆட்சி
மணிப்பூரில் பிப். 12-ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முடிவு...
மணிப்பூா் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதன்மூலம், அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவா் பதவியேற்கவும், குடியரசுத் தலைவா் ஆட்சி முடிவுக்கு வந்து புதிய அரசு அமையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
இந்த வன்முறை காரணமாக கடந்த ஆண்டு பிப்.9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவா் ஆட்சி, வரும் பிப்.12-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூா் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங், சட்டப்பேரவைத் தலைவா் சத்யபிரதா சிங், பாஜக மாநிலத் தலைவா் சாரதா தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் மணிப்பூா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாநில முன்னாள் அமைச்சா் யும்நாம் கெம்சந்த் தோ்வு செய்யப்பட்டாா். சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தோ்வு செய்யப்பட்டதன் மூலம், மணிப்பூரின் புதிய முதல்வராக அவா் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதல்வா் நெம்சா கிப்ஜென்?: மணிப்பூா் துணை முதல்வராக குகி சமூகத்தைச் சோ்ந்த பாஜக முன்னாள் பெண் அமைச்சா் நெம்சா கிப்ஜென் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Y Khemchand Singh was elected as the leader of the BJP legislature party in Manipur on Tuesday, paving the way for the formation of a popular government in the northeastern state with him as chief minister. Nemcha Kipgen, a woman Kuki leader and former minister, is likely to be the deputy chief minister in the new Manipur government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.