சிங்கப்பூர் பெண்ணிடம் ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளிக்கு 23 மாதங்கள் சிறை!
சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு 23 மாதங்கள் சிறை
சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு 23 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில், 2021 ஆம் ஆண்டில் இணையத்தில் பிஎஸ்4 எனும் விடியோ கேமை தேவேந்திரன் இளங்கோவன் (31) என்பவர் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தைக் கண்ட 25 வயதான பெண் ஒருவர், அதனை ஆர்டரும் செய்தார்.
இதனைப் பெறுவதற்கு முன்னதாக வைப்புத்தொகையாக 150 சிங்கப்பூர் டாலரை செலுத்துமாறும், மீதத் தொகையை டெலிவரியின்போதும் செலுத்துமாறும் தேவேந்திரன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, மொபைல் எண்களை இருவரும் பகிர்ந்து கொண்டநிலையில், பெண்ணை மேலும் பணம் செலுத்துமாறு தேவேந்திரன் கூறியுள்ளார். இருப்பினும், பிஎஸ்4-ஐ தேவேந்திரன் வழங்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய பல் சிகிச்சை, நாய்க்கான சிகிச்சை, நீதிமன்ற வழக்கு, சப்ளையருக்கான டிப்ஸ் என்றெல்லாம் கூறி, பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவற்றை தனது தனிப்பட்ட செலவுகளுக்காகவும், சூதாட்டத்திலும் செலவழித்துள்ளார். இவ்வாறு மொத்தமாக 2,68,000 சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ. 1.90 கோடி) தேவேந்திரன் பொய்கூறி, மோசடி செய்துள்ளார்.
தன்னிடமிருந்த பணம் அனைத்தும் காலியானதாக பெண் கூறியபோதிலும், தொடர்ந்து அவரை தேவேந்திரன் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனிடையே, வங்கிக் கணக்கிலிருந்து பணம் அடிக்கடி நிறைய காலியாவதைக் கண்ட பெண்ணின் தந்தை, தனது மகளிடம் விசாரித்தும் உள்ளார்.
இதனையடுத்து, தேவேந்திரன் குறித்து காவல் நிலையத்தில் மோசடி புகாரும் அளித்தார்.
இந்த நிலையில்தான், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட தேவேந்திரனுக்கு 23 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின்போதே, 1,04,000 சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.74 லட்சம்) இரு தவணையாக தேவேந்திரன் செலுத்தியும் விட்டார்.
Indian-Origin Man Cheats Singapore Woman, Jailed for Rs 1.9 Crore Scam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.