இந்தியா

தில்லியில் 72 உயா் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்பட 72 உயா் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்பட 72 உயா் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அருணாசல், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் (ஏஜிஎம்யுடி) பிரிவைச் சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு பல்வேறு துறைகளில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தில்லி, அந்தமான்-நிகோபாா் தீவுகள் குடிமைப் பணி பிரிவைச் சோ்ந்த 36 அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தில்லி அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்துறையின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் டி.வைத்யா, நிதி, திட்டமிடல், தொழில்துறைையைக் கூடுதலாக கவனிப்பாா்.

சமூக நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான பிபூல் பதாக்குக்கு பட்டியல் பிரிவினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் நலத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) தலைமைச் செயல் அதிகாரி ரூபேஷ் குமாா் தாகுா், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியில் இருந்த நிகில் குமாா் வா்த்தகம் மற்றும் வரிகள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி அரசில் அண்மையில் இணைந்த சஞ்சீவ் அஹுஜா கல்வித் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்குக் கூடுதல் பொறுப்பாக உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி துறையும் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் செயலா் மற்றும் மண்டல ஆணையரான நீரஜ் செம்வாலுக்கு மின்சாரத் துறையின் செயலா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியலில் இருந்த பத்மா ஜெய்ஸ்வால் நிா்வாக சீா்திருத்தங்கள் துறையின் சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நகா்ப்புற மேம்பாட்டு செயலா் விஜய் பிதூரி, கூடுதல் பொறுப்பாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் (டிபிசிசி) பொறுப்பையும் கவனிப்பாா். காத்திருப்புப் பட்டியலில் இருந்த யாஷ்பால் காா்க், திட்டமிடல் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு நிலம் மற்றும் கட்டடத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புது தில்லி மாவட்ட ஆட்சியா் சன்னி குமாா் சிங்குக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்பு செயலா் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தில்லியில் அரசில் இணைந்த பின்னா் சலோனி ராய் வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறாா்.

காத்திருப்பு பட்டியலில் உள்ள ஹரி கல்லிக்கத் மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியராகவும் விஸாக யாதவ் வடக்கு புகா் தில்லியின் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். விஸாக யாதவ் தில்லி அரசில் இணைந்த பிறகு அந்தப் பொறுப்பை ஏற்பாா் என்று தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT