அரசியல் வன்முறையை பாஜக தூண்டுகிறது: அகிலேஷ் குற்றச்சாட்டு!
மஹுவா மொய்த்ராவின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அகிலேஷ் கடுமையாக சாடியது பற்றி..
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாஜக தொண்டர்களின் போராடத்தை எதிர்கொண்ட மஹுவா மொய்த்ராவின் மீது மூட்டைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து அகிலேஷ் யாதவின் எக்ஸ் தள பதிவில்,
Advertisement
Advertisement
பாஜக தான் ஆளும் மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைக்கான நச்சுச் சூழலை உருவாக்கி அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜகவின் இத்தகைய எதிர்மறையான நடத்தையால் நாட்டு மக்கள் ஆழ்ந்த கோபமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம், ஆனால் சாதாரணக் கட்சித் தொண்டர்கள் தெருக்களில் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இச்சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, மக்களவை தலைவர் இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தனது பதிவுடன் மஹுவா மொய்த்ராவின் விடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
நாடியா மாவட்டத்தில் உள்ள கட்சி எம்.எல்.ஏ. அலிஃபா அகமதுவின் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின்போது, பாஜக தொண்டர்கள் முட்டைகளை வீசியும் தனக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் செயல்பட்டதாக மஹுவா மொய்த்ரா புதன்கிழமையன்று குற்றம் சாட்டியிருந்தார்.
அகமதுவின் இல்லத்தில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க காளிகஞ்ச் பகுதியில் உள்ள பலாஷிக்குச் சென்றிருந்தபோது, அங்குக் கூடியிருந்த போராட்டக்காரர்கள் திரும்பிப் போ (கோ பேக்) என்றும், திருடன் (சௌர்) என்றும் முழக்கமிட்டனர்.
மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆனால் காவல்துறை நிர்வாகம் மௌனமாக உள்ளது. பாஜக திட்டமிட்டு என் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியிருந்தார்.
Samajwadi Party president Akhilesh Yadav on Thursday condemned the alleged hurling of eggs at Trinamool Congress MP Mahua Moitra in West Bengal and accused the BJP of creating an atmosphere of political violence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.