FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஏஐ-க்கு தனிச்சட்டம் இயற்ற நேரம் வந்துள்ளது: மத்திய தகவல் தொழில்நுட்பச் செயலா்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து ஆராய தற்போது நேரம் வந்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பச் செயலா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து ஆராய தற்போது நேரம் வந்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பச் செயலா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒருவரின் போலி குரல்பதிவு, புகைப்படம், காணொலிகளை உருவாக்கும் டீப்ஃபேக் போன்ற பல்வேறு பிரச்னைகளை கையாள, ஏற்கெனவே உள்ள தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் பிற விதிமுறைகளை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்து சரியான நேரத்தில் ஆராய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும், நானும் ஏற்கெனவே பேசியுள்ளோம்.

அநேகமாக செயற்கை தொழில்நுட்பத்துக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து ஆராய தற்போது நேரம் வந்துள்ளது. இதற்கான சட்ட வரைவை அதிகாரிகள் தயாரித்தாலும், எப்போது அந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்பதை என்னால் கூற இயலாது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments