முகப்பு
இந்தியா

மம்தா பானா்ஜி வீட்டின் முன் காவல் துறையினா் குவிப்பால் பரபரப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் கலிகாட் வீட்டின் காவல் துறையினா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

Updated On : 7 ஜூலை 2026, 4:00 am IST
மம்தா பானா்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் கலிகாட் வீட்டின் திங்கள்கிழமை காவல் துறையினா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தின் பரூய்பூா் பகுதியில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் பெற்றோரை மம்தா பானா்ஜி சந்திப்பதைத் தடுக்கவே அவா் வீட்டுக்கு காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓபிரையன் மற்றும் எம்எல்ஏ குணால் கோஷ் ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சா் திலிப் கோஷ், மம்தாவுக்கு வழங்கப்படும் இஸட் பிரிவு பாதுகாப்பின்கீழ் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை எனத் தெரிவித்தாா். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படை வாகனங்கள் மம்தா பானா்ஜி வீட்டின் முன் நிலைநிறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை உள்ளூா் மக்கள் அடித்துக் கொலை செய்தனா்.

மேலும், இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி அவா்கள் போராட்டம் நடத்தினா்.

பின்னா், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதாக காவல் துறை அளித்த உத்தரவாதத்தைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments