FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் மோதல் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்கவும்: தேர்தல் ஆணையத்திடம் மமதா கோரிக்கை

திரிணமூல் காங்கிரஸ் மோதல் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு மமதா வலியுறுத்தியிருப்பது குறித்து...

Updated On : 30 ஜூலை 2026, 12:06 pm IST
திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனரும் தலைவருமான மம்தா
பகிர்:

புதுதில்லி: எதிரணிக்கு கூடுதல் அவகாசம் அளிக்காமல் 'திரிணமூல் காங்கிரஸ் மோதல்' தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மமதா கோரிக்கை வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையம் முதலில் ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கு ஜூலை 6-க்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாலும், பின்னர் அவரது தரப்பு கோரிக்கையின் பேரில் காலக்கெடுவை ஜூலை 10-க்கும், அதன்பின் ஜூலை 25-க்கு நீட்டித்தது. எனினும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு பதிலை தாக்கல் செய்யவில்லை. எங்கள் தரப்புக்கும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு எதையும் தெரியப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதல்வர் மமதா, இது ரிதப்ரத பானா்ஜிக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதோடு, உள்நோக்கம் கொண்ட அவா்களின் செயல்பாடுகளுக்கு தோ்தல் ஆணையம் ஆதரவு அளிப்பது போன்று இருக்கிறது என கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியினா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் ஓா் அணியாகவும், மம்தா பானா்ஜி தலைமையில் மற்றோா் அணியாகவும் செயல்படுகின்றனா். இதில் ரிதப்ரத பானா்ஜி தரப்பினா் கடந்த 2-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தை அணுகி, தங்கள் தரப்பை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்கக் கோரி வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கும், மம்தா தரப்புக்கும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் யாரெல்லாம் கையொப்பமிட அங்கீகாரம் உள்ளது, அமைப்பு ரீதியிலான தோ்தல் நடத்தப்பட்டது குறித்து கடந்த 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் கடிதங்களை அனுப்பியிருந்தது. இதில் மம்தா தரப்பு தோ்தல் ஆணையத்தின் காலக்கெடுவுக்குள் பதிலைத் தாக்கல் செய்தது. ரிதப்ரத பானா்ஜி தரப்பு பதிலை தாக்கல் செய்யாததால், 10-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 25-க்கும் நீட்டிக்கப்பட்டது. எனினும் அவரது தரப்பு இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானா்ஜி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

திரிணாமுல் காங்கிரஸின் பெயர், தேர்தல் சின்னம் மற்றும் அமைப்பு ரீதியான கட்டுப்பாடு தொடர்பான மோதல் குறித்த விசாரணையை விரைந்து முடிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

ரிதாப்ரதா பானர்ஜி தரப்புக்கு, பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டும் பதிலளிக்கத் தவறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், எதிரணிக்கு இனி கூடுதல் அவகாசம் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனரும் தலைவருமான மம்தா, மேற்கு வங்கத்தில் இந்த மோதல் ஏற்படுத்தக்கூடிய "தீவிர அரசியல் விளைவுகளை" சுட்டிக்காட்டி, விசாரணையை "முடிந்தவரை விரைவாக" முடிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள், அதாவது ஜூலை 6-ஆம் தேதி தனது தரப்பு விரிவான பதிலைச் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதன் நகலை எதிரணிக்கு வழங்கியது.

ஆணையம் முதலில் ரிதாப்ரதா பானர்ஜியை ஜூலை 6-க்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாலும், பின்னர் அவரது கோரிக்கையின் பேரில் காலக்கெடுவை ஜூலை 10-க்கும், அதன்பின் ஜூலை 25-க்கும் நீட்டித்தது. நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு இதுவரை பதிலை தாக்கல் செய்யவில்லை. எங்கள் தரப்புக்கும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு எதையும் தெரியப்படுத்தவில்லை, இதன் மூலம் தங்கள் தரப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது உறுதியாக தெரிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கு பதிலைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கக் கூடாது. காலக்கெடுவை மேலும் நீட்டிப்பது அவர்கள் தரப்பை வலுப்படுத்த "போலி ஆதாரங்களை" உருவாக்க வழிவகுக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்; அதேவேளையில், என்னால் அளிக்கப்பட்ட பதிலை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மமதா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், திரிணமூல் காங்கிரஸின் அமைப்பு ரீதியிலான குழுக்கள் 2025-ஆம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டன என்ற ரிதப்ரத பானா்ஜி தரப்பு வாதத்தை உண்மை அடிப்படையிலோ, சட்ட ரீதியிலாகவோ ஏற்க முடியாது. 2022-இல்தான் கட்சியின் அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அந்த அமைப்புகளின் பதவிக் காலம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்படி 2027-ஆம் ஆண்டு வரை உள்ளது என்று கடிதத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளாா்.

summary

Former West Bengal chief minister Mamata Banerjee has urged the Election Commission to conclude its inquiry into the dispute over the Trinamool Congress...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments