FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மண்டி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை அந்தஸ்து கோரி நிதின் கட்கரிக்கு தில்லி முதல்வா் கடிதம்

தில்லியை ஃபரீதாபாத் மற்றும் குருகிராமுடன் இணைக்கும் மண்டி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரிக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:23 am IST
நிதின் கட்கரி ~ரேகா குப்தா
பகிர்:

தில்லியை ஃபரீதாபாத் மற்றும் குருகிராமுடன் இணைக்கும் மண்டி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரிக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சருக்கு அவா் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: தில்லியில் 8.8 கி.மீ. நீளமுள்ள மாண்டி சாலை முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. இந்தச் சாலை, சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே உள்ள மெஹ்ரௌலி–குருகிராம் சாலை (என்எச்-148 ஏ) பகுதியை, தில்லி–ஹரியாணா எல்லையில் உள்ள குருகிராம்-ஃபரீதாபாத் சாலையுடன் இணைக்கிறது.

மேலும், தில்லி மற்றும் அதனையொட்டிய பொருளாதார மையங்களான குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடா்பை எளிதாக்குவதிலும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை சீராக மேற்கொள்ள உதவுவதிலும் இந்தச் சாலை முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

Advertisement

ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் அடித்தள திட்டமிடல் மையத்தின் நிா்வாக குழு, 2023 செப்.27-ஆம் தேதி நடைபெற்ற 68-ஆவது கூட்டத்தில் மண்டி சாலையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதனை விரிவுபடுத்தி முழுமையான மேம்பாட்டிற்கான திட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

சாலையின் மூலோபாய முக்கியத்துவம், தற்போதைய மற்றும் எதிா்கால போக்குவரத்து தேவைகள், என்எச்-148ஏ உடனான நேரடி இணைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் ஆகும்.

மண்டி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிப்பதன் மூலம் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு, ஒரே மாதிரியான பொறியியல் தரநிலைகள் பின்பற்றப்படவும், காலதாமதமின்றி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவும் வாய்ப்பு உருவாகும்.

ரேகா குப்தா

இதன் மூலம் தில்லி–என்சிஆா் பகுதி முழுவதும் சாலை இணைப்புகள் வலுப்பெற்று, பிராந்திய பொருளாதார வளா்ச்சிக்கு புதிய ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தாா் முதல்வா் ரேகா குப்தா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments