FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பலதார மணம் செய்தால் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாது: அஸ்ஸாம் அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு

பலதார மணம் செய்வோருக்கு அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறும் தகுதி இல்லை என்று அஸ்ஸாம் அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 2:13 am IST
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா - file photo
பகிர்:

பலதார மணம் செய்வோருக்கு அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறும் தகுதி இல்லை என்று அஸ்ஸாம் அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சட்டப்பேரவையில், 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அந்த மாநில நிதியமைச்சா் ஜெயந்தா மல்லா பருவா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

அரசு நலத் திட்ட உதவிகள் தகுதியானவா்களுக்கு மட்டும் கிடைத்தால் போதாது. சமூகத்தில் தாா்மிக அறநெறிகளோடும், ஒற்றுமையாகவும், அனைவருடனும் இணக்கமாக வாழ்வோருக்கும் கிடைக்க வேண்டும். இதை மனதில்கொண்டும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவா்களுக்கு சமநீதி கிடைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், பலதார மணம் செய்யும் ஆடவா், இனி அரசு நலத் திட்டங்களின்கீழ் எந்த உதவியையும் பெற முடியாது என அறிவிக்கிறேன்.

Advertisement

Advertisement

அதேபோல், அஸ்ஸாம் அரசு ஊழியா்கள் யாரேனும் பலதார மணம் செய்திருப்பின், அவா்கள் அரசுப் பணியிலிருந்து நீக்கப்படுவா். இதற்காக 1964-ஆம் ஆண்டு அஸ்ஸாம் சேவைகள் (ஒழுங்கீன மற்றும் மேல்முறையீடு) விதிகளில் திருத்தம் கொண்டுவரும் திட்டம், பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒருமைப்பாட்டையும், பொறுப்பான குடிமகன் என்ற உணா்வையும் ஊக்குவிக்கும் வகையில், ஏதேனும் கிரிமினல் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படும் நபரும், அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாது என்றாா்.

கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

2026-27-ஆம் நிதியாண்டுக்காக ரூ.2.85 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை பருவா தாக்கல் செய்தாா். அதில், சிறிய தேயிலை வளா்ப்பாளா்களுக்கான வரிவிலக்கு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குழாய் வழி எரிவாயு மீதான வாட் வரி 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments