FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போக்சோ புகாருக்கு பழிவாங்கல்! மாணவி குடும்பம் உள்பட 6 பேரை வெட்டிக்கொன்ற கொடூரம்!

தெலங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் 6 பேரைக் கொன்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 1:34 pm IST
போக்சோ புகாருக்கு பழிவாங்கல்
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு எதிராகப் புகார் அளித்தவர் உள்பட ஆறு பேரைக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரங்காரெட்டியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. போக்சோ வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராஜ்குமார் ஆறு பேரைக் கொன்றுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் கூறுகையில்,

Advertisement

Advertisement

கடந்த மே மாதத்தில் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்துள்ளார் ராஜ்குமார். கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனடிப்படையில் மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து முன்ஜாமீனில் வெளியேவந்த ராஜ்குமார், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஷாபாத் மண்டலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் ஆறு கொலைகளை அவர் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

விவசாயியான பி. ராஜ்குமார், முதலில் ஷாபாத் நகரில் உள்ள கல்லூரி மாணவியின் வீட்டிற்குச் சென்று, அவரது தாயார் மற்றும் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியைக் கொன்றுள்ளார். பின்னர், அந்த மாணவியை காரில் ஏற்றிச் சென்று தனது சொந்த கிராமமான தைவல்குடாவிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஏரிக்கு அருகில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

அதன்பிறகு, ஏரியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், அங்குத் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி, நான்கு மற்றும் ஒன்றவை வயதுடைய தனது இரண்டு மகன்களையும் கொன்றுள்ளார். ராஜ்குமார் கொலை செய்வதற்காக அரிவாள் மற்றும் கத்தியைப் பயன்படுத்தியுள்ளார்.

கொலைகளைச் செய்த உடனேயே, அவர் தனது தந்தையைத் தொடர்புகொண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறிவிட்டு, தொலைபேசியை அணைத்துள்ளார். இதையடுத்து, குற்றவாளியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ராஜ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். உயிரிழந்த ஆறு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குற்றவாளியைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இந்தக் குற்றங்களைச் செய்யும்போது அவர் தனியாகவே இருந்துள்ளார். கொலைகளுக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் பிடிபட்டு விசாரிக்கப்பட்ட பின்னரே முழு விவரங்களும் தெரியவரும். மாணவியின் மீது ராஜ்குமாருக்கு ஆழ்ந்த விரோதம் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தனது மனைவி, இரு குழந்தைகளைக் கொன்றதற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்.

இந்தக் கொலைகள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

A 35-year-old man, an accused in a POCSO case, allegedly killed six people, including his two children and three members of the family that filed a complaint against him in neighbouring Rangareddy district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments