FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி

நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தது பற்றி...

Updated On : 11 ஜூலை 2026, 10:44 am IST
நியூஸி. பிரதமர் லக்ஸனுடன் பிரதமர் மோடி - AP
பகிர்:

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு வரலாற்று மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது, அந்நாட்டு தூதுக்குழுவினர் சந்திப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது, "நீங்கள் (நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன்) இந்தியாவுக்கு வருகை தந்தபோதுதான் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருந்தது. மிகக் குறுகிய காலத்துக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக கிறிஸ்டோபர் லக்ஸனுக்கு நன்றிகள்.

Advertisement

Advertisement

இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சிகளை மென்மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளுக்கும் புதிய வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்.

நியூஸி. பிரதமர் லக்ஸனுடன் பிரதமர் மோடி - AP

இந்தச் சந்திப்பின் மூலம், இரு நாடுகளும் தங்களின் உறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் புதிதாக வியூகக் கூட்டாண்மையில் இணைந்துள்ளன.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தைத் தாண்டி, இருநாட்டு உறவுகளையும் மேலும் விரிவுபடுத்துவதே தற்போதைய நம்முடைய நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நியூஸிலாந்து சென்றடைந்ததன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

summary

PM Modi hails India - New Zealand FTA as historic milestone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments