மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவது பற்றி...
மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த ஜானகியின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்த பின்னர், மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் ஜானகியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
மறைந்த ஜானகி உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Members of the public are paying their respects to Janaki's mortal remains, which have been placed at the Mysuru Maharaja College grounds.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.