FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி

பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூலை 2026, 4:32 pm IST
எஸ். ஜானகி, ராகுல் காந்தி.
பகிர்:

பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது. எஸ். ஜானகியின் குரல் பல தலைமுறைக்கு அன்பு, பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் கீதமாக விளங்கியது.

அபார நேர்த்தியுடன் பல மொழிகளில் பாடி, இசை எனும் உலகளாவிய மொழி மூலம் மக்களை ஒன்றிணைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானாா். கா்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தாா் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

summary

Leader of the Opposition Rahul Gandhi has stated that the passing of singer Janaki is deeply saddening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments