FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவின் ஜாமீனில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து..

Updated On : 14 ஜூலை 2026, 1:10 pm IST
லாலு பிரசாத் யாதவ் - கோப்புப்படம்
பகிர்:

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கு தொடர்பான நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தி, முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

கடந்த ஜூலை 2019-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

Advertisement

Advertisement

தற்போதுள்ள ஜார்க்கண்ட் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று அந்த அமர்வு கூறியது.

தீவன ஊழல் வழக்குகளில், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர் நீதிமன்றம் "தவறாக" நிறுத்தி வைத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது.

பிகாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், தியோகர் கருவூலகத்திலிருந்து ரூ. 89 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

சிறப்பு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தியோகர் கருவூலத்திலிருந்து ரூ. 89.27 லட்சம் மோசடியாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், யாதவ் ஏற்கெனவே தனது தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்துள்ளதைக் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

The Supreme Court on Tuesday refused to interfere with the Jharkhand High Court order granting bail to RJD chief Lalu Prasad Yadav in a fodder scam case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments