FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னாள் பிஎஸ்பி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

முன்னாள் பிஎஸ்பி தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக..

Updated On : 14 ஜூலை 2026, 12:21 pm IST
சுட்டுக் கொலை - கோப்புப் படம்
பகிர்:

2021 ஆம் ஆண்டில் முன்னாள் பிஎஸ்பி தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறையினருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறையின் தகவலின்படி, ஹாசனின் நடமாட்டம் குறித்த தகவல் வந்ததையடுத்து சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறைக் குழுவினர் இரவு 11 மணியளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

குற்றம் சாட்டப்பட்ட முஸ்தபிசுல் ஹாசன் என்கிற பாபுவை போலீஸார் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் திங்களன்று இரவு கோரக்பூர்-குஷிநகர் சாலையில் உள்ள ராம்நகர்-கர்ஜாஹா அருகே நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மோதலின் போது சிறப்பு அதிரடிப்படையின் தலைமைக் காவலர் மகேந்திர சிங் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். காவல்துறையினர் அவரை நிறுத்த சென்றபோது , ​​ஹசன் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றதுடன் துப்பாக்கியால் சுட்டதாக கோரக்பூர் தொழிற்துறை மேம்பாட்டு ஆணையத்தின் வட்ட அதிகாரி கீர்த்தி நிதி ஆனந்த் தெரிவித்தார். தற்காப்புக்காக காவல்துறையினர் பதிலடி கொடுத்ததில் ஹசன் காயமடைந்தார்.

அவர் கோராபரில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்குச் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணியளவில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து 32 கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

உயிரிழந்தவர் ஆசம்கர் மாவட்டத்தின் மெஹ்நகர் பகுதியில் உள்ள குந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தின் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

குஜராத்தில் 2024 டிசம்பரில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஆசம்கருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​மகாராஷ்டிரத்தின் அமராவதி ரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் ரயிலிலிருந்து குதித்து காவல்துறை பிடியிலிருந்து தப்பியோடினார்.

நிஜாமாபாத் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் பிஎஸ்பி வேட்பாளரான கலாமுதீன் என்கிற கமலுவை, பிப்ரவரி 2021-இல் ஹாசன் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

A man accused of killing a former BSP leader in 2021 was killed in an encounter with the Uttar Pradesh Special Task Force and police here, a police official said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments