FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான திருத்தம் அறிவிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

அமில வீச்சு பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தம் பற்றி...

Updated On : 15 ஜூலை 2026, 10:44 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

அமில வீச்சு பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு வெளிப்புறத் தோற்றத்தில் சிதைவு இல்லாவிட்டாலும் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016’ -ன் கீழ் உள்ள சலுகைகளை நீட்டிக்கும் வகையிலான திருத்தத்தை அறிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

சமூக நீதி மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை துறை, 2016-ஆம் ஆண்டின் சட்ட அட்டவணையைத் திருத்தி மே 22, 2026 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கை பற்றி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

அதில், வெளிப்புறத் தோற்றத்தில் சிதைவு ஏற்படாமல், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களும் இனி ’அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற வரையறைக்குள் வருவார்கள் என்பதை அந்தத் திருத்தம் தெளிவுப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோன்ற பாதிப்புக்குள்ளானவர்களையும் 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என கடந்த மே 4 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், முறையான திருத்தம் அறிவிக்கப்படும் வரை, ‘அமில வீச்சுக்கு ஆளானவர்கள்’ என்பது உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாகக் கருதப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாகத் தேவையான திருத்தத்தை அறிவிக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவு நேற்று (ஜுலை 14) நிறைவேற்றப்பட்டதைப் பதிவு செய்த நீதிபதிகள் அமர்வு, "இந்தக் குறிப்பிட்ட திருத்தம் தெளிவுபடுத்தும் விதத்தில் இருப்பதால், 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016' நடைமுறைக்கும் வந்ததில் இருந்தே இந்த முறை அமலில் இருந்ததாகக் கருதப்படும். இதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடரும்” என நீதீமன்றம் தெரிவித்தது.

அமில வீச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் என்ற பெண் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

2009-இல் ஷாஹின் மாலிக் மீது அமிலம் வீசப்பட்ட வழக்கின் விசாரணையில் தாமதம், குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தாது போன்ற அமைப்பு ரீதியான குறைகள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. விசாரணையின்போது, ​​அமில வீச்சுத் தாக்குதல்கள் தொடர்பாக நாட்டின் அமைப்பு காட்டிய வேகம் தொடர்பான ஆய்வாக இவ்வழக்கு விரிவடைந்தது.

இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நீதிமன்றம் கடந்த ஜனவரியில் சுட்டிக்காட்டியது. அமில வீச்சில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமாக அமிலம் விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

summary

Announcement regarding amendments for acid attack victims: Central Government informs the Supreme Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments