FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமர் கோயில் நிதி முறைகேடு பக்தர்களைப் புண்படுத்தியுள்ளது: யோகி ஆதித்யநாத்

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 1:50 pm IST
யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்
பகிர்:

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசினார். அதில், ”அயோத்தியில் நடைபெற்ற சம்பவம், எங்களைப் போன்ற அனைத்து ராமர் பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுதந்திரமான அமைப்பு. அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அறக்கட்டளை சார்பில் விசாரணைக்கு கோரிக்கை வைத்த நிலையில், மாநில அரசு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது. அவர்களின் அறிக்கை வெளியானவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவிய இருவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அயோத்தியையும், ராமர் கோவிலையும், ஹிந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக சமாஜ்வாதி கட்சியினர் மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அரசியல்மயமாக்குகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

summary

Ram Temple fund irregularities have hurt the sentiments of devotees: Yogi Adityanath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments