ஆர்சிபி கூட்டநெரிசல்! வழக்கிலிருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு!
ஆர்சிபி கூட்டநெரிசல் வழக்கிலிருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது பற்றி....
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கிலிருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு விடுவித்துள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதையடுத்து, பெங்களூர் சின்னசாமி திடலில் ஆர்சிபி நிர்வாகம் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகத்தினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் பெங்களூரு காவல் ஆணையராக இருந்த பி. தயானந்தா, காவல் துணை ஆணையர் சேகர் எச். டெக்கன்னவர் மற்றும் காவல்துறை ஐஜி விகாஷ் குமார் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகினர்.
Advertisement
Advertisement
இவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சேகர் எச். டெக்கன்னவர் மற்றும் விகாஷ் குமார் ஆகியோரின் பணியிடை நீக்க உத்தரவு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிகாரிகளின் விளக்கங்கள் மற்றும் நிர்வாகத் துறையின் கருத்து ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான விசாரணைகளை கைவிட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
RCB Stampede - 3 IPS Officers Exonerated in the Case!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.