FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புராரி: பெண்ணை சுட்டு கொலை செய்து பிறகு இளைஞா் தற்கொலை

புராரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், ஒரு நபா் பெண்ணைச் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Updated On : 17 ஜூலை 2026, 3:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

புராரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், ஒரு நபா் பெண்ணைச் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் சோ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறை சந்தேகிப்பதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காவல் துறையின் உயா் அதிகாரி தெரிவித்ததாவது: புராரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவா் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கினா்.

Advertisement

Advertisement

வேலையை முடித்துவிட்டு பிற்பகல் சுமாா் 3:30 மணியளவில் வீடு திரும்பிய அந்தப் பெண்ணின் தங்கைதான் உடல்களை முதலில் பாா்ததாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்பெண் தனது தங்கையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தாா். ஹரியாணாவைச் சோ்ந்த அந்த நபா் வடக்கு தில்லியில் தனித்தனியாக வசித்து வந்தாா்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவா்கள் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது பரஸ்பர புரிதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தற்கொலை முயற்சியாகவே தோன்றுகிறது.

குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணா்களின் ஆய்வுக்கு பிற இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரியவரும். இது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments