FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை! "பஹந்தி" சடங்கு தொடக்கம்!

ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது பற்றி..

Updated On : 16 ஜூலை 2026, 12:05 pm IST
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை - PTI
பகிர்:

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஒடிஸா மாநிலத்தில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். நிகழாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை மிகவும் விமரிசையாகத் தொடங்கிய நிலையில், ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது.

பஹந்தி சடங்கு மூன்று மணி நேரம் நடைபெறும். பஹந்தியில் மும்மூர்த்திகளான பாலபத்திரர், தேவி சுபத்ரா மற்றும் ஜெகந்நாதர் ஆகியோர் கோயில் சன்னதியிலிருந்து சுமார் 2.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்குச் செல்வதற்காக சிங்க வாயிலுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டுள்ள அந்தந்த ரதங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

மக்களின் கோஷங்கள் மத்தியில், சங்குகளும், மேள தாளங்கள் முழங்க சக்ரராஜ சுதர்னம் முதலில் பிரதான கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்படும்.

ஸ்ரீ சுதர்சனம் என்பது புரியில் ஜெகந்நாதர் வடிவில் வணங்கப்படும் பகவான் விஷ்ணுவின் சக்கர ஆயுதம் ஆகும். ஸ்ரீ சுதர்சனத்தைத் தொடர்ந்து ஜெகந்நாதரின் மூத்த சகோதரர் பாலபத்ரர் சிலை கொண்டுவரப்படுவர். பாலபத்ரர் "தலத்வஜ" தேரில் அமர்த்தப்படுவார்.

ஜெகந்நாதர் மற்றும் பாலபத்ரரின் சகோதரியான சுபத்ரா தேவி "சூன்ய பஹந்தி" என்ற சிறப்பு ஊர்வலத்தில் "தர்பதாலன்" தேருக்கு அழைத்து வரப்படுவார்.

இறுதியாக ஜெகந்நாதர் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, ​​பக்தர்கள் 'ஜெய் ஜெகந்நாதர்' என்று கைகளை உயர்த்தி பலத்த கரகோஷத்துடன் கிராண்ட் ரோடு வழியாகக் கொண்டு வரப்படும்.

அரச சடங்குகள் நிறைவடைந்த பின்பு, மரத்தாலான குதிரைகள் பொருத்தப்பட்ட தேர்களில் பிற்பகல் 2 மணியளவில் பக்தர்களால் தேரிழுக்கும் பிரம்மாண்ட நிகழ்வு தொடங்கும்.

வழிநெடுகிலும் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல குழுக்கள் ரதயாத்திரைக்கு வருகை தந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments