நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜந்தா் மந்திா் போராட்டம் குறித்து ஜூலை 20-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை
நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது தொடா்ச்சியான கண்காணிப்பில் காவல் துறையினா் ஈடுபடுவது தனியுரிமையை மீறும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டிய பொதுநல வழக்கை ஜூலை 20-ஆம் தேதி விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டது.
நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது தொடா்ச்சியான கண்காணிப்பில் காவல் துறையினா் ஈடுபடுவது தனியுரிமையை மீறும் நடவடிக்கை என குற்றஞ்சாட்டிய பொதுநல வழக்கை ஜூலை 20-ஆம் தேதி விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டது.
முன்னாள் ஜேஎன்யு மாணவா் சங்கத் தலைவா் ஐஷே கோஷ் தாக்கல் செய்த இந்த மனுவை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அமா்வு முன் அவசரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோரிக்கை வைத்தாா்.
போராட்ட இடத்தில் காவல் துறையினா் கைப்பேசிகள் மற்றும் கேமராக்களுடன் சுற்றி வருவது, போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்களின் மனோபலத்தை குறைக்கும் வகையில் உள்ளது என்றும், இது போராட்டக்காரா்களின் அடிப்படை தனியுரிமையை வெளிப்படையாக மீறுவதாகும் மனுதாரா் தரப்பு வாதிட்டது.
Advertisement
Advertisement
ஜந்தா் மந்தரில் நடைபெறும் புகைப்படம், வீடியோ பதிவு மற்றும் கண்காணிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தலைமை நீதிபதி உபாத்யாயா, பொதுவாக பொதுநல வழக்குகள் புதன்கிழமைகளில் விசாரிக்கப்படுகின்றன. ஆனால் இதனை முன்கூட்டியே திங்கள்கிழமை எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தாா்.
நீட் தோ்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் பதிவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த 26 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
சமூக செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக் ஜூன் 28-ஆம் தேதி இந்த போராட்டத்தில் இணைந்து, அதன்பின் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.