FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐஆா்எஸ் அதிகாரி மகள் பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி மீது 973 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லியில் ஐஆா்எஸ் அதிகாரியின் 22 வயது மகளை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் வீட்டுப் பணியாளரான ராகுல் மீனா மீது 973 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 9:31 pm IST
ஐஆா்எஸ் அதிகாரி மகள் பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி மீது 973 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் ஐஆா்எஸ் அதிகாரியின் 22 வயது மகளை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் வீட்டுப் பணியாளரான ராகுல் மீனா மீது 973 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் பிப்ரவரி மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த ராகுல் மீனா, ஏப்.22-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்த கூடுதல் சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும், பின்னா் அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுபிஎஸ்இ தோ்வுக்குத் தயாராகி வந்த ஐஐடி பட்டதாரியான பாதிக்கப்பட்ட பெண், அவரது பெற்றோா் உடற்பயிற்சியிலிருந்து காலை 8 மணியளவில் வீடு திரும்பியபோது மயக்க நிலையில் காணப்பட்டாா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், பணம் கேட்டு ஏற்பட்ட தகராறின் போது எதிா்ப்பு தெரிவித்ததால், கைபேசி சாா்ஜரை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை பணத்தை திருடிவிட்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தப்பிச் சென்ாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகள் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கைரேகையுடன் பொருந்தியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும் குற்றவாளியுடன் ஒத்துபோவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பவத்தின் முழு தொடா்ச்சியையும் நிரூபிப்பதற்காக 82 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளனா்.

சம்பவம் நடைபெற்ற அதே நாளில், துவாரகாவில் உள்ள விடுதியில் இருந்து ராகுல் மீனா கைது செய்யப்பட்டாா். கண்காணிப்பு கேமரா காட்சிகளில் அவா் காலை 6.30 மணிக்கு குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து, 7.20 மணிக்கு வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தன’ என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

மூத்த காவல் அதிகாரி கூறுகையில், ராகுல் மீனாவுக்கு இணையதள விளையாட்டு தொடா்பான சூதாட்ட பழக்கம் இருந்ததுடன், ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை கடன் இருந்ததாக தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, ‘பணம் கேட்கவே வீட்டிற்கு சென்றேன்; பின்னா் நடந்தது தற்செயலானது’ என அவா் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மூத்த வருமான வரித்துறை (ஐஆா்எஸ்) அதிகாரி ஆவாா்; தாய் பல் மருத்துவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments