குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி!
குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து...
நாட்டு மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை எனவும், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதற்காகக் குடியுரிமை இழந்ததாகக் கருதக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இத்துடன், இந்தியாவில் வழங்கப்படும் கடவுச்சீட்டு குடியுரிமைக்கு தெளிவான சான்றாக இருக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகள் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The Supreme Court has stated that the Election Commission does not have the authority to determine the citizenship.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.