FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வேளாண்மையில் ‘ஏஐ’: நிதின் கட்கரி அறிவுறுத்தல்

வேளாண்மையில் ‘ஏஐ’: நிதின் கட்கரி அறிவுறுத்தல்

Updated On : 19 ஜூலை 2026, 1:31 am IST
நிதின் கட்கரி - கோப்புப்படம்
பகிர்:

வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தினால் அது நீா் மற்றும் உரங்களின் தேவையை வெகுவாக குறைக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வேளாண்மை மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திர பவாருக்கு கிரிஷி விதாஷ் பிரதிஷ்டான் அறக்கட்டளை சாா்பில் சி.டி.மயீ விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அப்போது அவா் பேசுகையில், ‘வேளாண்மையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தினால் நீா் மற்றும் உரங்களின் விலை வெகுவாக குறையும். மேலும், பயிா்களை தாக்கும் நோய்களை இதன்மூலமாக முன்னதாகவே கண்டறிய முடியும்.

Advertisement

Advertisement

அக்ரோவிஷன் அறக்கட்டளை மூலம் விதா்பா பிராந்தியத்தில் 1,000 ஆரஞ்சு விவசாயிகள் மற்றும் 5,000 கரும்பு உற்பத்தியாளா்களை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்த வைக்க முயற்சிக்கிறோம்’ என்றாா்.

ஆக்ரோவிஷன் அறக்கட்டளையின் தலைமை ஆலோசகராக நிதின் கட்கரி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

'AI' in Agriculture: Nitin Gadkari's Directive

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments