FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்...

Updated On : 19 ஜூலை 2026, 4:32 am IST
பாதுகாப்பு அதிகரிப்பு - ANI
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்திருந்த நாடாளுமன்றப் பேரணியை முன்னிட்டு தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறை 24 மணி நேரக் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், கூடுதல் காவலா்களையும் பணியில் அமா்த்தியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக் கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சட்டம்-ஒழுங்கு விதி மீறலைத் தடுக்கும் வகையில், புது தில்லி மாவட்டத்தின் முக்கிய நுழைவுப் பகுதிகள் உயா் பாதுகாப்பு மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு விரிவான தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனச் சோதனைகள் மற்றும் கூடுதல் காவல் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று நடைபெறவுள்ள சிஜேபியின் ‘சலோ சன்சத்’ (நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி) போராட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், இந்த நாடாளுமன்றப் பேரணிக்கு சிஜேபி (இஒட) இதுவரை அனுமதி கோரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினாா்.

summary

CJP protest amidst Parliament session - Security tightened in Delhi

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments